தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கலந்துரையாடல்!

 

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று பெருந்தோட்ட அமைச்சில் இன்று நடைபெற்றது.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான சம்பளம் நாளொன்றுக்கு 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பெருந்தோட்டத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரச தரப்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

பொருளாதார சுமை மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பொன்றை வழங்க வேண்டிய அவசியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
எனினும், கம்பனிகளின் பிரதிநிதிகள் உறுதியான பதிலை வழங்கவில்லை.

தாம் எதிர்நோக்கும் நெருக்கடியை பட்டியலிட்டனர்.

1. உற்பத்தி செலவு அதிகரிப்பு

2. ஏற்றுமதி வருமானங்கள் குறைவு

3. கம்பனிகள் இலாபம் ஈட்டுவதில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து விளக்மளித்தனர்.
அத்துடன், இன்னும் ஒரு மாத கால அளவில் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருகை தந்து அவர்களுடைய நிலைப்பாட்டை கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

இப் பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சம்மந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ , பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் அரசாங்கத்தின் சார்பிலும் பெருந்தொட்ட கம்பெனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் சார்பில் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles