ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 17வது தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.