சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தடவைகள் தோல்வியடைந்த அணி என்ற நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அணி இதுவரை 860 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 428 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதற்கு முன்னர் 993 போட்டிகளில் பங்கேற்று 427 போட்டிகளில் தோல்வியடைந்து இப்பட்டியலில் இந்திய அணியே முதலிடம் பிடித்திருந்தது.
அதேபோல ரி- 20 தொடரிலும் இலங்கை அணி அதிக தோல்விகளை பெற்றுள்ளது. 70 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
