கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு ஊழியர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் கண்டி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலினால் மாநகரசபை ஊழியரின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் காது பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குப்பைகளை வகைப்படுத்தாமல், குப்பைப் பையை வாகனம் மூலம் கொண்டுவந்துள்ளனர், இதனால் குப்பையை பொறுப்பேற்க ஊழியர் மறுத்துள்ளார். அத்துடன், வாகனத்தை இலக்கத்தை படம் எடுக்க முயன்றுள்ளனர். இதன்போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்களத்தின் கண்டி- சுதும்பொல ஊழியர்கள் வேலையில் இருந்து செவ்வாய்க்கிழமை (02) விலகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த கண்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.