நடிகை குஷ்புவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர், இவர் 90-களில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குஷ்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் ஜலதோஷம் காரணமாக பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் அவரை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles