” உரிய ஏற்பாடுகளின்றி சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்பட்சத்தில் அதன்மூலம் அரசு பலமடையக்கூடும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சுகாதார அமைச்சர்மீது மட்டுமல்ல இந்த அரசுமீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எதிரணி தமது கடமையை சரிவர நிறைவேற்றாமல், நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது எதிரணியை பலப்படுத்துவதாகவே அமையும்.
உடல் பலத்தைவிட மூளையாலே வேலை செய்ய வேண்டும்.” – எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.
