நவலோக்க வைத்தியசாலை குழுமத்தை மிக கௌரவமான நிறுவன வரிசையில் LMD முன்னனிலையில் தரப்படுத்தியுள்ளது

தனியார் வைத்தியசாலை துறையின் முன்னணி நாமமான நவலோக்க வைத்தியசாலை குழுமம் LMD சஞ்சிகை வருடந்தோறும் பிரகடனப்படுத்தும் மிக கௌரவமான நிறுவனம் என்பதுடன் தரவரிசையிலும் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் மிக புகழ்பெற்ற தொழில்முனைவோர் வரிசையில் இடம்பெற்ற நவலோக்க வைத்தியசாலையின் தலைவர் கலாநிதி.

ஜயந்த தர்மதாச அவர்களது நிலையான தலைமத்துவம், இலக்கு மற்றும் இலங்கையின் தனியார் சுகாதார சேவையின் பிரிவுகளின் எல்லைகளை விஸ்தரிப்பதற்கு வழங்கிய தலைமைத்துவத்திற்காக LMD சஞ்சிகை ஊடாக வருடாந்தம் பிரகடனப்படுத்தும் மிக கௌரவமான நிறுவனங்கள் ஊடாக வைத்தியசாலையானது தனது துறையில், முன்னணியாளராவதற்கு நவலோக்க வைத்தியசாலை குழுமத்தால் முடிந்துள்ளது.

நவலோக்க வைத்தியசாலை குழுமம் அதன் நிறுவன கலாச்சாரம், நிறுவன சமூக பொறுப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, அனர்த்த முகாமைத்துவம், நேர்மை, தேவைக்கேற்ப மாற்றடையக்கூடிய தன்மைக்கேற்ற சுகாதார சேவைகள் பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் Hall of Fameஇன் சிறந்த நிறுவனங்கள் 20 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தலைவர் மற்றும் பிரதம அதிகாரிகளுக்காக LMD இன் Hall of Fame தரப்படுத்தலில் கலாநிதி.

ஜயந்த தர்மதாச மற்றும் உப தலைவர் ஹர்ஷித் தர்மதாச ஆகியோர் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இலங்கையின் தனியார் துறை வைத்தியசாலையின் முன்னணி நாமமான நவலோக்க வைத்தியசாலை குழுமம் அண்மையில் முதலீட்டு தரப்படுத்தலுக்கமைய கடன் தரப்படுத்தலில் BBB நிலையான இடத்தில் உள்ளதாக ICRA Lanka Limited ஊடாக புதிய இலக்குடன் மீண்டும் உறுதிப்படுத்தப்படடுள்ளது.

ICRA தரப்படுத்தல் ஊடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிதி நிலைத்தன்மையை கொண்ட நவலோக்க வைத்தியசாலை குழுமம் கடந்த காலங்களில் பலமான, நிலையான வியாபார மாதிரியை செயற்படுத்தி வெளிப்படுத்திய மதிப்பீட்டை கௌரவப்படுத்தவும், உயர் மற்றும் பெறுமதியான மருத்துவ சேவை ஊடாக பல்வேறு செயற்பாட்டு விசேட தன்மைகளை வழங்கியமைக்காகவுமே இவ்வாறு கௌரவப்படுத்தப்பட்டுள்ளது.

‘இலங்கையில் சவால் நிறைந்த காலகட்டத்தில் ஏனைய போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் எமக்கு கிடைத்த இந்த வெற்றி தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

நவலோக்க வைத்திய குழுமம் எப்போதும் மக்களின் நலன், சிறந்த சிகிச்சை முறைகளை வழங்குவதற்கு, சுகாதார சேவையின் பிரவேசத்தை விஸ்தரிப்பதற்கு, சுகாதார சமநிலையை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது.

எம்மிடம் சேவை பெறும் அனைவரது சுகாதார நிலையை மேம்படுத்துவதே எமது நோக்கம்.

கொவிட்-19 தொற்று காரணமாக மிக கடினமான நிலையை நாம் எதிர்கொண்டுள்ளபோதிலும் எமது இலக்கை அடைவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

எமது மருத்துவர்கள், ஆலோசகர்கள், ஊழியர் குழாம் உட்பட வைத்தியசாலையின் சேவையை சிறந்த மட்டத்தில் கொண்டு செல்வதற்கு இரவு பகல் என பாராமல் உழைக்கும் சுகாதார துறை சார்ந்தவர்கள் அனைவரும் தமது வாழ்க்கை தொடர்பாக கவனம் செலுத்தாது சிறந்த பணியை ஆற்றுகின்றமைக்;கு நாம் நன்றி செலுத்த வேண்டும்’ என நவலோக்க வைத்தியசாலை குழுமத்தின் உப தலைவர் ஹர்ஷித் தர்மதாச குறிப்பிட்டார்.

‘ஒரு இரவில் இந்த கௌரவத்தை எமது வைத்தியசாலை பெறவில்லை என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.

மக்கள் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை நீண்டகாலம் வென்றமையே அதற்;கு சான்றாகும். LMD சஞ்சிகை ஊடாக வருடந்தோறும் பிரகடனப்படுத்தும் மிக கௌரவமான நிறுவன வரிசையில், நாம் முன்னணி வகிப்பதற்;கு காரணமாக அமைந்தது எதுவெனில் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையாகும்.

இதுவே எமது கௌரவத்திற்கு சிறந்த சான்றாகும்’ என நவலோக்க வைத்தியசாலை குழுமத்தின் உப தலைவர் ஹர்ஷித் தர்மதாச மேலும் குறிப்பிட்டார்.

1985 இல் இலங்கையின் முதலாவது தனியார் வைத்தியசாலையாக ஆரம்பிக்கப்பட்ட நவலோக்க குழுமம் பல வருடங்களாக இலங்கையின் சுகாதார துறையை பலமாக்கிய வர்த்த நாமமாக முன்னிலை பெற்றுள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள இரசாயன ஆய்வுகூட வலையமைப்பை மேலும் பலப்படுத்துவதுடன் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் கட்டில்களின் கொள்ளளவை 365 வரை அதிகரித்துள்ளது.

இன்று யேறயடழமய ர்ழளிவையடள Nawaloka Hospitals PLC இலங்கையின் பாரிய வைத்தியசாலை வலையமைப்பாக உள்ளது.

நவலோக்க வைத்தியசாலை குழுமத்தின் கிளினிக் சேவை மற்றும் சிகிச்சைகள் தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச மட்டத்திலான மருத்துவ சேவைகளை கொண்டுள்ளது.

இலங்கையின் எந்தவொரு இடத்திலிருந்தும் நோயாளர்களுக்கு இலகுவாக அடைந்;து சிகிச்சை பெறக்கூடிய முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள், விசேட தாதியர்களின் சேவை போன்றன நவலோக்க வைத்தியசாலையை, இலங்கையின் சிறந்த வைத்தியசாலையாக மாற்றியுள்ளது.

2021 இல் நவலோக்க குழும வியாபாரம் தமது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு புதிய கட்டிடத்தை கட்டியுள்ளதுடன் அதனூடாக வலயத்தில் தமது சேவையை பலப்படுத்தியுள்ளது.

நவலோக்க விசேட மத்திய நிலையம் ஊடாக எலும்பு முறிவு இணைக்கும் நிலையம், கொரோனா தொற்றுக்கு பின்னராக சிகிச்சை நிலையம், சிறுநீரக சிகிச்சை நிலையம், இருதய நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல சேவைகள் அடங்கலாக 14 சிகிச்சை நிலையங்கள் செயற்படுகின்றன.

2021 ஜனவரி மாதத்திலிருந்து நவலோக்க வைத்தியசாலை கொவிட்-19 நோயாளர்களுக்காக சிகிச்சை வழங்குவதற்கு 900 கட்டில்கள் கொண்ட சேவையை வழங்க நட்சத்திர ரக ஹோட்டல்கள் பவற்றுடன் இணைந்து தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் கொண்ட சர்வதேச தரத்திலான, முழுமையான நான்கு சிகிச்சை நிலையங்களை அமைத்துள்ளது.

கொவிட்-19 தொற்றில் பாதிக்கப்பட்ட 10,000 மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சூழலில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வைத்தியசாலை உதவியது.

LMD எண்ணத்திற்கு அமைய செயற்பட்ட மற்றும் முன்னணி ஆய்வு நிறுவனமான நீல்சன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமையவே மிகவும் கௌரவமான நிறுவனங்களுக்கிடையில் முன்னணியில் தரப்படுத்துவதற்கான காரணமாகும்.

நிதி செயற்திறன், குணநலன், முகாமைத்துவ பண்பு, நேர்மை, புத்தாக்கம், நிறுவன கலாசாரம், CSR உள்ளிட்ட 12 விடயங்கள் ஊடாக 800 பேருக்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles