லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டில்லுகுற்றி தோட்டத்தில் கடும் காற்று காரணமாக வீடொன்றின்மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
நேற்று (21) மாலை 04 மணியலவில் இடம்பெற்ற இந்த அர்த்தத்தில் வீட்டின் கூரைப்பகுதி மற்றும் வீட்டின் ஒரு பகுதி சுவரும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் மின் இணைப்பு வயர்கள் மீது மரக்கிளை வீழ்ந்து மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வறு பாதிக்கப்பட்ட வீட்டின் அருகில் டில்லுகுற்றி தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான பாரிய மரம் ஒன்றின் கிளையே வீட்டின் மீது முறிந்து வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வீட்டார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இந்த வீட்டில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மற்றும் பிள்ளைகளின் பாட்டி என நால்வர் பாதுகாப்பாக உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
-ஆ.ரமேஸ்.










