வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று வெள்ளிக்கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஹோமாகம தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் ஈடுப்பட்டுள்ளேன். இந்நிலையில், நான் பிரதி அமைச்சராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் செயற்பட்டுள்ளேன்.
குறித்த காலப்பகுதியில் என்னால் இயன்ற சேவைகளை மக்களுக்குச் செய்துள்ளேன்.
நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த ஹோமாகம தொகுதியை நான் பிரதிநிதித்துவப்படுத்தியமைக்கும், ஹோமாகம நகரை கல்வியின் மையமாக மாற்றியமைக்காகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கலாநிதிப் பட்டத்தைப் பெறுவதற்காகக் கல்வியைத் தொடரவும், திரைப்படம் தயாரிப்பதற்கும் எனது நேரத்தைச் செலவிடத் திட்டமிட்டுள்ளேன்.” – என்றார்.