நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.

நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

அவ்வாறு நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியாக போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது சாதகமாக அமையும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், முதலில் ஜனாதிபதி தேர்தலா, பொதுத்தேர்தலா என்பதை அவர் உறுதியாக அறிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தை தற்போது கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி வசம் உள்ளது.

Related Articles

Latest Articles