” நாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன. எனவே , மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆபத்துக்குள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் கொலைகள்,கொள்ளைகள், ஊழல்கள், தாக்குதல்கள் போன்றவை தொடர்ந்தும் பதிவாகிவருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற அநாகரீக செயல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலவே 220 இலட்சம் மக்களின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டும். ” – என்றார்.










