நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,461 ஆக பதிவு

செப்டெம்பர் மாதத்தில் இதுவரை நாட்டில் 1,583 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,461 ஆக உள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கூற்றுப்படி, டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 13,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles