யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவும் , மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட பொலிஸ் பிரிவில் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதியும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.











