நாட்டில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி யாழ். மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மொனறாகலை மாவட்டத்தில் கிரிவெவ, செவனகல, பஹிராவ, ஹபரத்தவெல, ஹபருகல, மஹாம, இதிகொலபெலஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.










