நாட்டில் ஐந்து நாட்களுக்குள் 20 ஆயிரத்து 828 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி ஆகஸ்ட் 20 ஆம் திகதி 3,839 பேருக்கும் 21 ஆம் திகதி 3,884 பேருக்கும், 22 ஆம் திகதி 4,304 பேருக்கும், 23 ஆம் திகதி 4,355 பேருக்கும், 24 ஆம் திகதி 4,446 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.










