நாட்டில் 8 நாட்களுக்குள் 19,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மே 11 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மே 11 ஆம் திகதி 2 ஆயிரத்து 568 பேருக்கும், 12 ஆம் திகதி 2 ஆயிரத்து 429 பேருக்கும், மே 13 ஆம் திகதி 2 ஆயிரத்து 269 பேருக்கும், 14 ஆம் திகதி 2 ஆயிரத்து 289 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், மே 15 ஆம் திகதி 2 ஆயிரத்து 386 பேருக்கும், 16 ஆம் திகதி 2 ஆயிரத்து 275 பேருக்கும், மே 17 ஆம் திகதி 2 ஆயிரத்து 456 பேருக்கும், மே 18 ஆம் திகதியாகிய இன்று 2 ஆயிரத்து 478 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Paid Ad
Previous article‘கொழும்பு துறைமுகர நகரம்’ – உயர்நீதிமன்றதின் திருத்தங்களை ஏற்க அமைச்சரவை அனுமதி!
Next articleகந்தபளை, நாவலப்பிட்டிய வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 34 பேர் பலி!