நானுஓயா கார்லிபேக் தோட்டத்தில் வெள்ளம் – 4 வீடுகள் பாதிப்பு!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கார்லிபேக் தோட்டத்தில் இன்று (20) பிற்பகல் பெய்த கடும் மழையால், கிளையாறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 4 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதற்கு முன்னரும் இப்பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதன் காரணமாக வீட்டு தளபாடங்கள், உணவு பொருட்கள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இப்பகுதி தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதாகவும் தம்மை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் அரசியல்வாதிகள் வாக்கு வாங்குவதற்கு மட்டுமே தம்மை தேடி வருவதாகவும் இவ்வாறான நேரத்தில் தம்மை யாரும் பார்க்க வருவதில்லை என பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Latest Articles