ஹிந்தி படங்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாண்டே.
32 வயதான இவர், நேற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்ச பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்தது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பூனம் பாண்டே அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “நான் சாகவில்லை.. உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தான் எப்படி செய்தேன்” என்று கூறி வீடியோ பதிவிட்டு இருக்கிறார்.