ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் முக்கியத்துவம்மிக்க அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இரு வாரங்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. பிரதமர் தலைமையிலேயே கூட்டம் நடைபெற்றது.
எனினும், நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையிலேயே நடைபெறும்.
இதன்போது முக்கியமான சில தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. குறிப்பாக அரிசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலான முடிவுகள் எடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

அத்துடன், ஒரு கிலொ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கவுள்ளது.
அதேபோல சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீனெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அது பற்றியும் ஆராயப்பட்டு தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளது.
