நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் நெர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகலில் ஒரு மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டுக் காலத்தை நேற்று இரண்டு மணி நேரமாகக் குறைத்திருந்தது, ஆனால் தற்போது அடுத்த இரு நாட்களுக்கு 2 மணிநேரம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles