நாளை முதல் மின்வெட்டு அமுலாகும் விதம் தொர்பிலான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, மின் விநியோகத்தடையினை  அமுல்படுத்தப்படுத்துவதற்கான நேர அட்டவணையினை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

வலயங்களின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் இவ்வாறு மின் விநியோகத்தடை  அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, A முதல் W வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும்  20 நிமிடங்களும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலம் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles