சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணம் வென்றது இந்திய அணி.
பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.
துபாயில் நடந்த இறுதியாட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் வெற்றி இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தலைவர் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி சிறப்பான ஆரம்பத்தை வழங்கியது.
அபாரமாக ஆடிய ரோகித், 41 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த போது கில் (31) அவுட்டானார். விராத் கோஹ்லி (1) ஏமாற்றினார். ரோகித் (76) நம்பிக்கை தந்தார்.
ஸ்ரேயாஸ் (48), அக்சர் படேல் (29), ஹர்திக் பாண்ட்யா (18) ஓரளவு கைகொடுத்தனர். இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து வெற்றி பெற்று, 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.