நிலையான சம்பள சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறோம் : தோட்ட துரைமார் சங்கம்

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிற்துறையினருக்கும் ஒரு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீவிர முற்போக்கான சம்பள சீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட துரைமார் சங்கம் (PA) அறிவித்துள்ளது.

அரசியல் தலயீடு, பொருளாதார யதார்த்தத்திலிருந்து முற்றிலுமாக தொடர்பில்லாத, தற்போதுள்ள காலனித்துவ கால தினசரி சம்பள முறையிலிருந்து அவசரமாக மாறுவதற்கான தேவையை வலியுறுத்துகிறது – பெருந்தோட்ட துரைமார் சங்கமானது (PA) ஒரு புதிய தொழில்முனைவோர் அடிப்படையிலான வருமானம் ஈட்டும் மாதிரியை முன்மொழிந்துள்ளது, அதில் ஊழியர்களே தனது வருவாயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

எவ்வாறாயினும், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் தலைவரான பாத்திய புலுமுல்ல, பிற நாடுகளில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள பெருந்தோட்ட விவசாய மாதிரிகளின் முன்மாதிரியைப் பின்பற்றி அர்த்தமுள்ள மற்றும்; முற்போக்கான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நேரம்; வந்துவிட்டது என தெரிவித்தார். ஊழியர்கள் தங்கள் வேலையைப் பொறுப்பேற்பதற்கு அதிகாரம் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் வருவாயை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.

வீடியோ கான்பரன்சில் நடத்தப்பட்ட Virtual செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ‘இதுதான் முன்நோக்கிச் செல்லும் வழி, தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்காலத்திற்காக ஆர்வமுள்ள அனைத்து பங்குதாரர்களையும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம், இது ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாவிற்கும் அதிகமாக ஈட்டி அவர்களது வருமானம் 55,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை ஈட்டுவதற்கு உதவியாக அமையும்.

தோட்டத் தொழிலில் உள்ள அனைத்தும் – சந்தைகள், வாங்குபவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன மாற்றமடைந்துவிட்டன, எனினும் மாறாமல் இருப்பது இந்த சம்பள முறைதான். இந்த பழைமையான மாதிரியை தொழிலாளர்களை தொழில்முனைவோராக மாற்றக்கூடிய ஒரு அமைப்பைக் கொண்டு, அவர்களின் வருவாயைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் அவர்களகுக்கு அல்லது தொழிற்துறைக்கு பயனளிக்காத சம்பள முறைமையில் அவை எப்போது இடைநிறுத்தப்படும்.

பெருந்தோட்ட துரைமார் சங்கத்தினுடைய கூற்றின்படி, இத்தகைய உற்பத்தித் திறன் – இணைக்கப்பட்ட சம்பள மாதிரிகள் உலகெங்கிலுமுள்ள வெற்றிகரமான விவசாயத்துறை வர்த்தக நடைமுறையில் உள்ளன, மேலும் அவை ஏற்கனவே இலங்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்குமெனவும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

‘சம்பளம் உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்டுள்ள தோட்டங்களில், தொழில்புரியும் தொழிலாளர்கள் மாதமொன்றுக்கு 65,000 ரூபாவுக்கும் அதிகமாக சம்பாதிக்க முடியுமென வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும், உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட நாள் ஊதியம் சோதனை செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட தோட்டங்களில், தொழிலாளர் உற்பத்தித் திறன் மற்றும் தொழிலாளர்களின் வருவாய் ஆகியவை தினசரி ஊதிய முறைக்கு திரும்புவதன் மூலம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த சீர்த்திருத்தம் அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்ற புரிதல் எம்மத்தியிலும்; கூட உள்ளது. அவர்களுக்கு வழங்கும் ஊதியம் தினசரி 1000 ரூபாவை விட மிக அதிகம்.’ புலுமுல்ல தெரிவித்தார்.

1992இல் தனியார்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேயிலைத் தொழிலின் உற்பத்திச் செலவு (COP) படிப்படியாக அதிகரித்துள்ளது, இருப்பினும் உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி ஆகியன விகிதாசார அளவில் அதிகரிக்கவில்லை. ‘COP க்குள் தற்போதைய தொழிலாளர் பங்களிப்பானது 63% ஆகும். ஊதியங்கள் உற்பத்தித் திறனுடன் இணைக்கப்படும்போது, மொத்த COP குறைந்து, அதேநேரம் தொழிலாளர்களின் வருவாய் அதிகரிக்கும். இதன்மூலம் பொருளாதாரத்தை அளவீடு செய்யும் வேலைத்திட்டமாகும்.’ என தோட்டத் துரைமார் சங்கத்தின் பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஸதுரை தெரிவித்தார்.

இந்த முறையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலை நேரத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும் வழிவகுக்கும், அதாவது அவர்கள் வேலை முடித்;தவுடன் மீதமுள்ள நேரத்தை தங்கள் சொந்த காரியங்களுக்காகவும் பயன்படுத்த முடியும்.’

நாங்கள் முன்மொழிகின்ற சம்பள முறைமையானது, பிராந்திய பெருந்தோட்;ட நிறுவனங்களுக்கு (RPCs) புதிதாகத் தோன்றினாலும், சிறு தோட்டத்துறையில் இது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளதுடன், இந்த முறையானது RPC களில் மற்றும் அரச துறைகளிலும் கூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இவை அனைத்தும் பெரும் வெற்றியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறுதோட்ட உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் கே.எல். குணரத்ன தனது சொந்த அனுபவங்களை விளக்கிக் கூறுகையில், உற்பத்தித் திறன் – இணைக்கப்பட்ட ஊதியங்கள் எவ்வாறு அன்றாட சம்பள மாதிரியை விட தொழிலாளர்கள் மற்றும் சிறுதோட்ட உரிமையளர்களுக்கு ஊக்கமளிக்கின்றது என தெரிவித்தார்.

‘தொழிலாளர்கள் அவர்கள் ஈட்டும் வருவாய் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட குறிக்கோளை இலக்காகக் கொள்ளத் தொடங்கும் போது, அவர்களால் வேலை செய்யும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கேற்ப அவர்களின் முயற்சிகளை முழுமையாக கொடுக்க முடியும். எனது சொந்த அனுபவத்தையும் ஏனைய சிறுதோட்ட உரிமையாளர்களின் சார்பாகவும் நான் கூறுவது, உற்பத்தித்திறன் – இணைக்கப்பட்ட ஊதியங்களை நோக்கி நகர்வது நிச்சயமாக எமது துறைக்கு கொடுக்கப்பட்ட சரியான அழைப்பாகும், ஏனெனில் இது தொழிற்திறன், வாழ்வாதாரம் மற்றும் தொழிற்துறையில் உற்பத்தியை அதிகரித்துள்ளது.’ என தெரிவித்தார்.

சிறுதோட்ட உரிமையாளர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், பெருந்தோட்ட துரைமார் சங்கமானது பலமுறை பரிந்துரைத்த உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட மாதிரியானது, தொழிலாளர்கள் தங்கள் சொந்த சமூகங்களுக்குள் ‘மாற்றத்தின் முகவர்களாக’ மாற்றமடைய உதவும். அத்தகையதொரு மாதிரிக்கு சுமுகமாக மாறுவதற்கு உறுதி செய்வதற்காக ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காகவும் தற்போதுள்ள ஊதிய மாதிரியை சீர்திருத்த அனைத்து தொழில் பங்குதாரர்களுடனும் ஒத்துழைப்பதற்கான விருப்பததை பெருந்தோட்ட துரைமார் சங்கம் மறுபரிசீலனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles