நிவாரண நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

திரைப் பிரபலங்கள் பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.

‘செக்மேட் கோவிட்’ என்கிற பெயரில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாட உள்ளார். செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அமீர்கான், ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Paid Ad
Previous articleஇலங்கைத் தொடருக்கான இந்திய அணி தலைவராக தவான்
Next articleடெஸ்ட் போட்டியில் 97 ஓட்டங்களுக்குள் சுருண்ட மே. தீவுகள் அணி