கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலத்த – அட்டபாகை கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள ஓடையொன்றில் அடித்து செல்லப்பட்டு நேற்று மதியம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தை கூட்டி கொண்டு இருந்த போது ஒடையில் தவறி விழுந்து அவர் நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 66 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










