நுவரெலியாவில் பஸ் விபத்து 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்

நுவரெலியா – வலப்பனை பகுதியில் இன்று  இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளானவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பிலிருந்து உடபுஸ்ஸல்லாவை பகுதிக்கு திருமண நிகழ்வொன்றிற்காக வருகைத் தந்து, மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வலபனை, ரிகில்லகஸ்கட மற்றும் நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles