நுவரெலியாவில் மாயமான யுவதி 5 நாட்களின் பின் கண்டுபிடிப்பு!

ஐந்து நாட்களுக்கு முன்பு நுவரெலியா பெருந்தோட்ட பகுதியில்,  காணாமல்போன 25 வயது யுவதி, நுவரெலியா சாந்திபுர பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் இன்று (10.09.2021) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியவை வருமாறு,

நுவரெலியா பெருந்தோட்ட பகுதியில் தனது தாயாருடன் விறகு தேடிச் சென்ற 25 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் கடந்த ஜந்து நாட்களுக்கு முன்பு இடம்பெற்றது.

இது தொரடர்பாக குறித்த சிறுமியின் தாயார் நுவரெலியா பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிசாரும் பொது மக்களும் இராணுவத்தினரும் இணைந்து குறித்த வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ச்சியாக நடைபெற்ற தேடுதலின் பொழுதும் குறித்த சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.இவ்வாறான நிலையில் நேற்று   வியாழக்கிழமை மாலை குறித்த பெண்ணை நுவரெலியா சாந்திபுர பகுதியில் அங்குள்ள பொது மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக பொது மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து பொலிசார் குறித்த சிறுமியை பொறுப்பேற்று அவரை நுவரெலியா வைத்தியாசலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த பெண் தற்பொழுது நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிருபர் – எஸ். தியாகு

Related Articles

Latest Articles