‘சுபீட்சத்தின் நோக்கு’ எண்ணக்கருவின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தினை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் நாலக்க கொடஹேவாவின் தலைவமையில் இன்று (19) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இத்திட்டதின் மூலம் கினிகத்தேன, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்கள் புதுப்பொழிவு பெறவுள்ளன.
இத்திட்டத்திற்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் கித்துகல தொடக்கம் நுவரெலியா வரையிலும் நுவரெலியா தொடக்கம் கண்டி வரையிலும், நுவரெலியா தொடக்கம் பதுளை வரையிலும் சுற்றுலாத்துறையினரை மனங்கவரக்கூடிய இடங்களையும் நகரங்களையும் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யப்படும்.
விசேடமாக நகர அலங்காரம், பூங்காக்கல் நடை பாதைகள் அமைத்தல்,பார்வை கூடங்கள் அமைத்தல்,கவர்ச்சிகரமான வர்த்தக நிலையங்கள்,அமைத்தல்,புதிதாக உணவகங்கள் தங்குமிட விடுதிகள் அமைத்தல்,போன்ற பல சுற்றுலாத்துறைதிட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதில் முதல் கட்ட பணியாக கினிகத்தேனை நகரினை அழகுபடுத்தி வாகன தரிப்பிடம் கொண்ட ஒரு நகரமாக விருத்தி செய்யப்படவுள்ளன.அட்டன் நகரிலும் குறித்த செயத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
இரண்டாவது திட்டமாக கொட்டகலையில் காணப்படும் ஈரவலயமான பகுதியினை பூங்கா மற்று சுற்றலா பயணிகளின் நடை பாதைகள் ,வர்த்தக நிலையங்கள்,ஆகியன இதன் போது அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அதனை தொடர்ந்து தலவாக்கலை நகரினை அழகுபடுத்தி சுற்றுலா பிரயாணிகளை கவரக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளன.
அமைச்சர் சி.பி.ரத்நாயக்க , இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆரம்பகட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்,ரமேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
க.கிசாந்தன்
