நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்துக்கு பயன்படுத்த அனுமதி!

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டமொன்றுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீரவிடம் வினவிய போது, தபால் நிலையத்திற்கான மாற்று இடமொன்று வழங்கியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Articles

Latest Articles