நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 184 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 102 பேருக்கும், நோர்வூட் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 65 பேருக்கும், நோட்டன் பிரிட்ஜ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் மற்றும் கந்தபளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
