‘நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்’

நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பான கூட்டம், நுவரெலியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் பி. புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.

நுவரெலியா பிரதேச செலயகத்துக்குட்பட்ட பிரதேசங்களின் பாதை, சுகாதாரம், நீர்பாசனம், மக்களின் குடியிருப்புகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் எதிர்கால வேலைதிட்டங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் அலசி ஆராயப்பட்டுள்ளன.

அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் செயற்பாடுகள், சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் சுயத்தொழி முன்னெடுப்புகள் அத்தோடு பெருந்தோட்ட பகுதிகள் நிர்மாணிக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டம் அவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அமைச்சர்களான சமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Paid Ad