நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு – ராதா கோரிக்கை!

“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது பற்றி நாடாளுமன்றத்தில் இன்று காலை பேசப்பட்டது. கடந்த 4 மாதங்களாக பெய்த கடும் மழையால் நுவரெலியா மாவட்டத்திலும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இழப்பீடு வழங்கப்படும்போது அவர்களுக்கும் உரிய கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை விவசாய அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.” – எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles