நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறு

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பலர் ஒன்பது படங்களிலும் சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளனர்.

70% கணிதம் உட்பட எட்டுப்பாடங்களில் சித்தியைப் பெற்று மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடரக்கூடிய வகையில் சித்தியடைந்துள்ளனர்.

மணிவண்ணன் கயால மிசேல் என்ற மாணவி 7ஏ 2பி என ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறிப்பாக தமிழ்,கணிதம்,சமயம்,ஆங்கிலம் ,வரலாறு போன்ற பாடங்களில் சிறந்த சித்தி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறு களைப் பெற்ற சகல மாணவர்களுக் கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் தமது பாராட்டு களையும் வாழ்த்துகளையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவிப்பதாகவும் அதிபர் சொ.சிவபாலசுந்தர் தெரிவித்தார்.

செ.திவாகரன்

Related Articles

Latest Articles