நெடுந்தீவில் 750 துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் 750 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிக்கு ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியில் குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள நெடுந்தீவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றனர்.

ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் ரி 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750ற்கும் மேற்பட்ட ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் முடிவுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

Related Articles

Latest Articles