நேபாளத்தில் 32 பேரின் உயிரை பலியெடுத்த பஸ் விபத்து!

நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் நேபாள்குஞ் பகுதியில் இருந்து கம்கதி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று முகுல் மாவட்டம் அருகே திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

நேபாள இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து தசரா பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இந்த பஸ்ஸில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles