நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 40 உடல்கள் இன்று மதியம்வரை மீட்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விமானப் பயணிகளில் 53 நேபாள பிரஜைகளும், 5 இந்தியர்களும், ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து இரண்டு பயணிகள் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்துள்ளனர்.