நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து-100க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது.

இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர் என பொலிஸ் செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார்.

தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வெடிவிபத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles