நோர்வூட்டில் விசேட சோதனை – ஊரடங்கைமீறியோர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினைமீறி பயணிக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் – என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் அயரபி சந்தியில் நோர்வூட் பொலிஸாரால் இன்று (25) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே கைதுகள் இடம்பெற்றுள்ளன. இவர்கள், உரிய அனுமதி பத்திரமின்றி ஊரடங்கு சட்டத்தினை மீறி தேவையற்ற விதத்தில் நடமாற்றத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சில ஆட்டோக்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பொது மக்கள் சிலர் கடும் எச்சரிக்கையுடன் திருப்பி அனுப்பட்டுள்ளதுடன், வாகனங்களும் திருப்பி அனுப்பட்டுள்ளன.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles