நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் நோர்வூட் பிரதேச சபைத் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சபை அமர்வில் தவிசாளர் பங்கேற்றுள்ளார். இதனால் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. நோர்வூட் பிரதேச சபையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
