பேருந்து விபத்தில் 6 வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம் அடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
படல்கும்பரை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய தாயும் 6 வயதுடைய மகனும் எல்டப் மற்றும் கோணக்கலை பசறை டெமேரியா பகுதியை சேர்ந்த 27,38,48 வயதுடையவர்களே இவ்வாறு காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சுமார் 15 ற்கும் பேர் மேற்பட்டோர் இருந்ததாகவும் ஏனையோருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தை பேருந்தின் நடத்துனரே செலுத்தியதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.