பசறை, பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை ஆகிய பகுதிகளில் 24-11-2021 மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனையில் 93 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க பதுளை மாவட்ட உப தலைவர் எஸ். சுதர்சன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பசறையில் 18 பேரும், பதுளையில் 12 பேரும், பண்டாரவளையில் 51 பேரும், அப்புத்தளையில் 12 பேருமாக 93 பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தத்தம் வீடுகளிலேயே, பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனரென்றும்’ கூறினார்.
எம். செல்வராஜா, பதுளை