அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் – பச்சை பங்களா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடும் பாதிப்புக்குள்ளான ஆறு பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மரத்தில் கட்டியிருந்த குளவிகள் களைந்து சரமாரியாக கொட்டியதில் பாதிப்புக்குள்ளான இரண்டு ஆண்களும் நான்கு பெண்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்