இலங்கையில் உணவு பாதுகாப்பு குறித்து சிறந்த கவனம் செலுத்தி வரும் நாட்டின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ தற்போது 7 மாவட்டங்களில் பரவியுள்ள படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்று அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டம் குறித்து கிரிஸ்புரோ தமது நன்றி மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. விவசாய அமைச்சு தெரிவிக்கும் வகையில் படைப்புழு தாக்கத்திற்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு சோளச் செய்கையை பாதுகாப்பதற்காக துரித வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் பீடை நாசினி கட்டுப்பாடுகள் தொடர்பாக அனுபவம் கொண்ட 6 நிபுணர்கள் ருவண்டாவிலிருந்து அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்து படைப்புழு தாக்கத்திற்குள்ளான அநுராதபுரம் மாவட்டத்தில் சோளச் செய்கையை ஆய்வு செய்தனர். கோழி தீவன தயாரிப்புக்கு சோளம் முக்கியமான மூலப்பொருளாக இருப்பதனால் மொனராகலை மற்றும் மகியங்கனை ஆகிய பிரதேசங்களிலுள்ள விவசாய குடும்பங்களின் சோள அறுவடையின் போது அவற்றை நியாயமான விலையில் பாரிய அளவை கொள்வனவு செய்ய கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது 7 மாவட்டங்களில் பரவியுள்ள படைப்புழு தாக்கம் சோளச் செய்கைக்கு மட்டுமன்றி நெல் மற்றும் சிறுபோக செய்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் தமது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த தாக்கத்திற்கு ஒரு தீர்வாக உயிரியல் பீடை கட்டுப்படுத்தலின் கீழ் புதிய பக்றீரியா ஒன்றை மஹஇலுப்பல்லம விவசாய ஆய்வு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதை தற்போது அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபி கோட்டாபய ராஜபக்ஷ, ருவண்டா ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இராஜதந்திர சந்திப்பின் போது விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த ருவண்டா விவசாயம் தொடர்பான நிபுணர்கள் நாட்டிற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விவசாய அமைச்சினால் நாடு முழுவதிலும் விவசாய அதிகாரிகள் மறற்றும் துறைசார் அதிகாரிகள் படைப்புழு தாக்கத்திற்கு இலக்கான சோளம் உள்ளிட்ட ஏனைய சிறு போக நிலங்களை நெருக்கமாகச் சென்று ஆய்வு செய்ததுடன் விவசாய காப்பீட்டு இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதற்காக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படைப்புழு ததாக்கம் குறித்து அரசாங்கம் எழுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த கிரிஸ்புரோ நிறுவனத்தின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரெஸ் செலஸ், “படைப்புழு தாக்கம் அதிகரிப்பினால் சேதமடைந்த சோளச் செய்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்திற்கு எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன் மிகவும் துரிதமாக இதுகுறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியமை குறித்தும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் சோளச் செய்கையை பிரபல்யப்படுத்தி இலங்கையில் சோளத்தினால் தன்னிறைவாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு கோழி வளர்ப்பு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களாக எமது ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுப்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.
கோழித் தீவனத்திற்காக சோளம் பிரதான மூலப்பொருளாக இருப்பதுடன் கிரிஸ்புரோ நிறுவனம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபாவை விவசாயிகளிடம் இருந்து சோளத்தை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்துகிறது. இன் மூலம் உள்நாட்டு சோள விவசாயிகளின் வருமானம் பாதுகாக்கப்படுவதுடன் சோள நிறுவனங்களுக்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்வதற்கும் நிறுவனத்திற்கு முடியுமாகும். இதன் கீழ் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி மொனராகலை மற்றும் மகியங்கனை, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களிலுள்ள 2000க்கும் அதிகமான விவசாயிகளின் சோள அறுவடையை கொள்வனவு செய்துகொள்ள முடியும். இவ்வாறு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் சோளத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களஞ்சியப்படுத்துவதற்கு கிரிஸ்புரோவிடமுள்ள களஞ்சிய வசதிகள் காணப்படுவதுடன் சியம்பலாண்டுவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் விசாலமான சோள களஞ்சிய கட்டடத் தொகுதியானது கிரிஸ்புரோ உடனான கூட்டு முதலீடாக நடத்திச் செல்லப்படுகிறது. இங்கு ஒரு தடவைக்கு 16,000 மெற்றிக் தொன் சோளத்தை களஞ்சியப்படுத்த முடியும். மேலும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளின் சோளத்தை விலைக் கொடுத்து வாங்குவதற்கு நிறுவன
ம் நடவடிக்கை எடுப்பதனால் சோளம் குறித்த நாட்டிலுள்ள நிறுவனம் ஒன்றினால் வழங்கப்படும் சிறந்த விலையை விவசாயிகளுக்கு வழங்க கிரிஸ்புரோ நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கிராமிய வறுமையை குறைப்பதே நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும். விவசாயிகள் வழங்கும் சோளத்திற்கான வருமானம் அறுவடையை வழங்கிய அதே தினத்தில் அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்வதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.