பதுளையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து!

பதுளை, அலுகொல்ல – கந்தேகெதர வீதியில் பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை கொஹொவில பிரதேசத்தில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு கொஹவில கோவிலுக்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேருந்து விபத்துக்குள்ளான போது பேருந்தினுள் 12 பேர் பயணம் செய்ததாகவும் அவர்களில் எவரும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles