பதுளை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவில் பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் பெண் தொழிலாளியொருவர் படுகாயமடைந்து பதுளை அரசினர் மருத்துமனை தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வனர்த்தம் 11-11-2020 (இன்று) பிற்பகல்கின்ரோஸ் பெருந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த எஸ். ஜானகி என்ற 54 வயது நிரம்பிய பெண் தொழிலாளிமீதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. அவ்வேளையில் ஏனைய தொழிலாளர்கள் பெண் தொழிலாளி மீது விழுந்த மரக்கிளையை அகற்றிவிட்டு அத்
தொழிலாளியை மீட்டு, பதுளை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாகஇருப்பதால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிசிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
எம். செல்வராஜா