பதுளை நகரில் கடந்த சில நாள்களாக பாடசாலை மாணவர்களுக்கு (மாவா) என அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை விற்பனைச் செய்த பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் பதுளை பிரதான பஸ் நிலையத்தில் இன்று கைதுச்செய்யபட்டுள்ளார்.
பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பதுளையில் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுச்செய்யபட்டுள்ளார் இவரிடம் 20 மாவா போதைப்பொருள் பக்கட்டுகளும் பொலிஸாரினால் கைபற்றியதாக பதுளை பொலிஸ் தெரிவித்தனர்.
சந்தேகம் நபரை இன்று பதுளை நீதவான் நிலையத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கபடுகிறது.
விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை பதுளை பொலிஸ் முன்னெடுத்து வருகின்றன.
ராமு தனராஜா










