பதுளையில் பெண்ணொருவரை கரம்பிடிக்க 19 தடவைகள் இலங்கை வந்த இந்திய பிரஜை….! இறுதியில் நடந்தது என்ன?

பதுளை 3 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தார் எனக் கூறப்படும் இந்திய பிரஜை ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,  மேற்படி பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் சுமார் 19 தடவைகள் இலங்கைக்கு வந்து பெண்ணின் வீட்டுக்கும் சென்றுள்ளார் என பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான உறவில் தமக்கு உடன்பாடு இன்மையால், வீட்டுக்கு வரவேண்டாம் என பெண்ணின் பெற்றோர் குறித்த நபரிடம் கூறியுள்ளனர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு சந்தேக நபர் உடன்படவில்லை. இந்நிலையில் அவர் நேற்று குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார், இதனையடுத்து குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த அவர் முயற்சி செய்தார் என பெண்ணின் பெற்றோரால் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதன் பின்னர் சந்தேக நபரான இந்திய பிரஜை பதுளை பொலிஸாரினால் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles