பதுளையில் ரயில் மோதி இளைஞன் பலி!

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த இரவு தபால் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஹவன்கெட்டிய, உடுவர, ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரவு 7.30 மணியளவில் எல்ல புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி 200 மீற்றர் தொலைவில் உள்ள புகையிரத பாதையில் தலை வைத்து படுத்து இருந்ததாக புகையிரத சாரதி விசாரணையில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .பிரதீப் களுபஹன ஆலோசனையின்
எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுகின்றது.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles