பதுளையில் வங்கி ஊழியர்கள் போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் பதுளை கிளையினரால் (இன்று 07-04-2021ல்) பதுளை பஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

மேற்படி வங்கிக் கிளையினர், தமது மதிய நேர இடைவேளையின் போது, நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையான காலப்பகுதியில் மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தினர்.

இப் போராட்டத்தின் போது, 1996ம் ஆண்டு ஓய்வூதியம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை அரசு அமுல்படுத்த வேண்டும், சம்பளம் மற்றும் 3 வருட பயிற்சி ஆகியவற்றிலுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.

பிரதமர் வழங்கிய இலங்கை வங்கி தொடர்பாக வெளியிட்ட முன்னேற்றகரமான கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் ஆகியன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிட்டு இப்போராட்டம் இடம்பெற்றது.

எம். செல்வராஜா, பதுளை

Paid Ad