ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளையில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடன் சம்பவ இடத்துக்கு விரைந்த பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் ,குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் இருந்து 6300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமு தனராஜா